• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

இரானிய அதிபருடனான பிரதமர் மோதியின் உரையாடல் எதைக் காட்டுகிறது?

Byadmin

Mar 22, 2026


பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை அன்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை அன்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார்.

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார். இது குறித்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

அவர் ‘பிராந்தியத்தின் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக்’ கண்டித்ததுடன், “இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

அதே சனிக்கிழமை அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம், ‘ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்கள்’ குறித்து 22 நாடுகளின் கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இதில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டது.

இந்த 22 நாடுகளில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.

அதாவது, இரானைக் கண்டிப்பதில் இருந்து இந்தியா விலகி இருந்தது.

By admin