பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் டோபி மேன்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் மீது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இரான் “கடுமையாக” தாக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான “ஒப்பந்தத்தைச் செய்ய டெஹ்ரான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளது” என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல் நடந்துள்ளது.
“இரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக” புதன்கிழமையன்று “தற்காப்புத் தாக்குதல்களைத்” தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்
பட மூலாதாரம், Hwawon Ceci Lee/Anadolu via Getty Images
இதனைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரண்டு கப்பல்களை ஐஆர்ஜிசி (IRGC) தாக்கியதாக இரான் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தைச் சோதிக்கும் வகையில், பழிக்குப்பழி வாங்கும் தாக்குதல்களின் தீவிரமாக, இரானும் அமெரிக்காவும் சமீபத்திய நாட்களில் ராணுவ மற்றும் கண்காணிப்புத் தளங்களை இலக்காகக் கொண்டுள்ளன.
வளைகுடாவில் உள்ள கெஷ்ம் தீவிலும், பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.