• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

இரானில் அமெரிக்காவின் முற்றுகை தொடங்கியது – டிரம்பின் எச்சரிக்கை என்ன?

Byadmin

Apr 13, 2026


(கோப்புப் படம்).

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்).

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் “தாக்குதல் கப்பல்கள்” அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கியுள்ளது.

இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இரானின் கடற்படை முழுமையாக அழிக்கப்பட்டு, மொத்தம் 158 கப்பல்கள் கடலடியில் உள்ளன என தனது ட்ரூத் சோஷியலில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் டிரம்ப் கூறியுள்ளார்.

”ஆனால், அவர்கள் ‘வேக தாக்குதல் கப்பல்கள்’ என்று அழைக்கும் சில சிறிய கப்பல்களை தாக்கவில்லை, ஏனெனில் அவை பெரிய அச்சுறுத்தலாக கருதப்படவில்லை. இந்தக் கப்பல்களில் ஏதேனும் எங்கள் முற்றுகைக்கு அருகில் வந்தால், அவை உடனடியாக அழிக்கப்படும். கடலில் போதைப் பொருள் கடத்துபவர்களை எதிர்கொள்ள நாம் பயன்படுத்தும் அதே தாக்குதல் முறையையே பயன்படுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin