• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

இரானில் 4 நாட்கள் நடைபெறும் அலி காமனெயியின் இறுதிச்சடங்கு – பிரதமர் மோதி கலந்து கொள்வாரா?

Byadmin

Jun 28, 2026


 பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காமனெயியின் இறுதிச் சடங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இரான் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் இறுதிச் சடங்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பல உலகத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டினர் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் காமனெயியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்தில் தேசிய தூதுக்குழுக்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், காமனெயியின் இறுதிச் சடங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இரான் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

எந்தவொரு வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை இரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

By admin