• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

இரானுக்கு எதிராக இஸ்ரேல் தனது ராணுவ வலிமையால் மட்டுமே வெல்ல முடியாது – ஏன்?

Byadmin

Apr 5, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு நாடுகள், நெதன்யாகு

பட மூலாதாரம், EPA

டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை இணைக்கும் நெடுஞ்சாலையில், தற்போது இஸ்ரேலிய கொடிகளுக்கு இணையாக அமெரிக்க கொடிகளும் பறப்பதைக் காண முடிகிறது. இரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா ஆற்றிய பங்குக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவிக்கும் ஒரு வழியாகவே இது பார்க்கப்படுகிறது.

போர் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது பதவியில் இருந்து விலகிய, இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹானெக்பி, நிலைமைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை விளக்கினார். “இரானிடம் இருந்து வரும் ‘நம்பகமான ராணுவ அச்சுறுத்தலை’ அங்கீகரிக்க வேண்டுமென மட்டுமே நாங்கள் முன்பு அமெரிக்க நிர்வாகங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தோம்,” என்றார் அவர்.

மேலும் அவர், “இரானின் திறன்களைக் குறைப்பதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் இரவும் பகலும் இணைந்து உழைத்து வருகின்றன என்பது, என் மிகச் சிறந்த கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட ஓர் யதார்த்தமாகும்,” என்று குறிப்பிட்டார்.

அதாவது, முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்காவிடம் இருந்து வலுவான ஆதரவைப் பெறுவதற்கு இஸ்ரேல் சிரமப்பட்டது; ஆனால் இப்போது இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக இணைந்து செயல்படுகின்றன. இது நடக்கும் என்று அவர் ஒருபோதும் கற்பனைகூடச் செய்து பார்த்ததில்லை என்கிறார்.

இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைவதாக அமெரிக்கா எடுத்த முடிவு, இஸ்ரேலுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் தத்தமது பலத்திற்கு ஏற்ப இலக்குகளைப் பிரித்துக்கொண்டு, பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

By admin