• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

இரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நெருங்குகிறது – டிரம்ப் முன் உள்ள 3 வாய்ப்புகள்

Byadmin

Apr 8, 2026


'ஒட்டுமொத்த நாகரிகமும் இன்றிரவு அழியும்... 47 ஆண்டுகால ஆட்சியின் முடிவு' - இரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

பட மூலாதாரம், EPA

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இரான் தவறினால், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 8 மணிக்குள் இரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என டிரம்ப் முன்பு கெடு விதித்திருந்தார்.

இது தொடர்பாக தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும். அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடந்துவிடும். எனினும் தற்போது முழு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரம் குறைவான மனங்கள் இருப்பதால் புரட்சிகரமான, அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?”

“இன்று இரவு நமக்குத் தெரிந்துவிடும். உலகின் மிகவும் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. 47 ஆண்டுகால மிரட்டி பணம் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். இரானின் சிறந்த மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

By admin