• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

இரானுடன் போர்நிறுத்தம் – “தற்காலிக வெற்றிக்காக அதிக விலை” கொடுத்த டிரம்ப்

Byadmin

Apr 8, 2026


 அதாவது "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்" என்ற தனது வாக்குறுதியின்படி போரைத் தீவிரப்படுத்துவது அல்லது பின்வாங்கித் தனது நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த ஒப்பந்தம் டிரம்பை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து விடுவித்துள்ளது.

இறுதியாக, நிதானமான முடிவுகள் தான் வெற்றி பெற்றுள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு வெற்றி பெற்றுள்ளன எனக் கூறலாம்.

வாஷிங்டன் நேரப்படி 18:32 மணிக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், அமெரிக்காவும் இரானும் ஓர் “உறுதியான” அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் “மிக நெருக்கமான நிலையை” அடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் வகையில் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குத் தான் சம்மதித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

இது சரியாகக் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனச் சொல்ல முடியாது என்றாலும், ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் இரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல்களைத் தொடுக்கும் என டிரம்ப் விதித்திருந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (இந்திய நேரப்படி புதன் கிழமை அதிகாலை) என்ற காலக்கெடு முடிவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் இது வெளியானது.

இரானும் மோதல்களை நிறுத்திவிட்டு, ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இவை அனைத்தும் அமையும்.

அந்த நீர்வழிப்பாதையின் மீது தங்களுக்கு இன்னும் “ஆதிக்கம்” இருப்பதாக வலியுறுத்தும் அதே வேளையில், அதனைத் திறப்பதாக இரான் அரசு கூறியுள்ளது.

By admin