• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

இரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்கும் நிலையில் சீனா என்ன செய்கிறது?

Byadmin

Mar 3, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, மத்திய கிழக்கு
படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் மீதான இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் மற்றும் அவரது படுகொலையை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் “கடுமையான மீறல்” என்று சீனா வர்ணித்துள்ளது.

இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல்கள் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை.

மாறாக, இந்த நெருக்கடியான நேரத்தில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் இரானுடன் நிற்க முடிவு செய்துள்ளன என்பதையும் உலகம் உற்று நோக்குகிறது.

இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளின் ஒவ்வோர் அறிக்கையும், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், ஒவ்வொரு ராஜ்ஜீய சமிக்ஞையும் கவனமாக ஆராயப்படுகின்றன.

இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களை ‘ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது’ என்று சீனா விவரித்துள்ளது.

By admin