• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரானை “கற்காலத்திற்கே” தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் – போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?

Byadmin

Apr 2, 2026


இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்று டிரம்ப் கூறினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் இருப்பதாக டிரம்ப் கூறினார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா இரான் மீது குண்டுவீசித் தாக்கி, அந்நாட்டை மீண்டும் ‘கற்காலத்திற்கே’ தள்ளிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்திலும் டிரம்ப் இரான் மீது இதேபோன்றதொரு மிரட்டலை விடுத்திருந்தார்.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்” என்று கூறினார்.

இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் டிரம்ப் கூறினார்.

தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

By admin