• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

இரானை காப்பாற்றிய ‘உத்தி’ போர் நிறுத்தத்திற்கு ஆபத்தாக முடியலாம் ஏன்?

Byadmin

Apr 9, 2026


இரானை காப்பாற்றிய 'உத்தி' போர் நிறுத்தத்தை கடினமாக்கலாம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவும், இரானும் இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ள போதிலும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இன்னும் இரானிடமிருந்து தாக்குதல்கள் வருவதாகத் தெரிவித்து வருகின்றன.

இந்தத் தாக்குதல்கள் அந்த நாட்டின் தலைமையால் உத்தரவிடப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், தாக்குதல்களை நடத்த இரான் தனது பிராந்தியத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனவே, போர்நிறுத்த உத்தரவுகள் அவர்களைச் சென்றடையச் சிறிது காலம் எடுக்கலாம்.

உள்ளூர் நேரப்படி காலை 08:00 மணி முதல் “இரானியத் தாக்குதல்களின் தீவிர அலையை” தாங்கள் கையாண்டு வருவதாக குவைத் ராணுவம் கூறுகிறது.

28 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ராணுவம், இந்தத் தாக்குதல்கள் எண்ணெய் உள்கட்டமைப்பு, மின் நிலையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு “கடுமையான பொருள் சேதத்தை” ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிராகத் தாங்கள் “தீவிரமாகப் பதிலடி” கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

By admin