• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

இரானை தாக்க தயங்கும் வளைகுடா நாடுகளை தூண்டக்கூடிய 2 முக்கிய விஷயங்கள் எவை?

Byadmin

Mar 23, 2026


உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான இரானின் 'சவுத் பார்ஸ்' பகுதியை இஸ்ரேல் தாக்கியதையடுத்து, வியாழக்கிழமையன்று கத்தாரின் 'ராஸ் லாஃபான்' எரிசக்தி வளாகத்தின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

பட மூலாதாரம், Reuters

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகள் முழுவதும் இரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதுவரை, கத்தார் மற்றும் பிற வளைகுடா நாடுகள் இரானால் பலமுறை இலக்கு வைக்கப்பட்ட பின்னரும், அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்றே வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளன.

அந்த நாடுகள் ஏன் தாக்குதல்களைத் தவிர்க்கின்றன மேலும் எது அவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டக்கூடும்?

அதிக பாதிப்பு, குறைந்த பலன்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிராகத் தங்களது கூட்டு ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, இரான் உடனடியாக இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள வளைகுடா நாடுகளுக்கு எதிராகவும் தாக்குதல்களைத் தொடுத்தது.

பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அனைத்து நாடுகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

By admin