• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகளைத் தாக்குவது ‘பயத்தின்’ வெளிப்பாடா?

Byadmin

Mar 3, 2026


பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று இரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கிய சில மணிநேரங்களிலேயே, மத்திய கிழக்கில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தியது.

பட மூலாதாரம், Fadel Senna/AFP via Getty Images

படக்குறிப்பு, மார்ச் 1, 2026 அன்று துபையில் நடந்ததாகக் கூறப்படும் இரானிய தாக்குதலுக்குப் பிறகு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகையைக் கடந்து செல்லும் மெட்ரோ ரயில்.

பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று இரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கிய சில மணிநேரங்களிலேயே, மத்திய கிழக்கில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதாலும், இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவு அளித்ததாலும் இவை இரானின் இலக்குகளாக மாறியுள்ளன.

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியம் முழுவதும் இரான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்காப்புக்காக இரான் அனைத்து ராணுவ வழிமுறைகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ட்ரூத்ஃபுல் ப்ராமிஸ் 4’ (Truthful Promise 4) என்ற நடவடிக்கையின் கீழ் அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துக்களை இரான் குறிவைத்து வருவதாக, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

By admin