• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

இரான் அமெரிக்காவுக்கு எப்படி பதிலடி கொடுக்கும்? இரான் முன்புள்ள 4 வழிகள் என்ன?

Byadmin

Jun 22, 2025


இரான் - இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இன்று காலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றுவதற்காக பீடத்தின் மீது நின்ற பெஞ்சமின் நெதன்யாகு, தற்போதைய யுத்தத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிகழ்வுகள் குறித்து தனது தேச மக்களுக்கு முதலில் ஹூப்ரூ மொழியில் தெரிவிக்கவில்லை.

மாறாக, அமெரிக்கா இரானின் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நேரடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை புகழ்ந்து ஆங்கிலத்தில் பேசினார்.

நெதன்யாகுவின் குரலில் வெற்றி தொனி இருந்தது, அதை அவரது புன்னகை மறைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

இஸ்ரேலுக்கு இரானால் ஏற்பட வாய்ப்புள்ள அபாயம் என அவர் கருதுவது குறித்து, தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவிட்டுள்ளார்.

By admin