• Sun. Apr 12th, 2026

24×7 Live News

Apdin News

இரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை – சமீபத்திய செய்தி என்ன?

Byadmin

Apr 12, 2026


இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Pakistan Prime Minister’s Office

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. இவை முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் ‘நிபுணர் மட்டத்தில்’ தொடங்கியுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசி உருது சேவையிடம் தெரிவித்தார்.

அந்த அதிகாரியின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தையின் இந்தப் கட்டத்தில், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் ‘தொழில்நுட்ப அம்சங்கள்’ ஆராயப்படவுள்ளன.

பாகிஸ்தானின் முன்னிலையில், அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே நேரடி முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களும் பிபிசியிடம் இதே தகவலைத் தெரிவித்திருந்தன.

இதற்கு முன்னதாக, ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் ‘நேர்மறையாக’ அமைந்திருந்ததாக இரண்டு அதிகாரிகள் பிபிசி உருது சேவையிடம் கூறியிருந்தனர்.

By admin