• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

இரான் – அமெரிக்கா பதற்றம்: தங்கம் விலை மேலும் உயரக்கூடுமா?

Byadmin

Feb 26, 2026


தங்கம் விலை

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற-இறக்கமாகவே உள்ளது. பிப்ரவரி 25 நிலவரப்படி சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,287க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ. 14,930 க்கு விற்பனையானது.

தீபாவளி பண்டிகையை அடுத்து, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இப்படியாக, ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ. 1.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

இந்த நிலையில், தங்கத்தின் விலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். “பண்டிகை காலங்களில் ஏற்படும் வழக்கமான உயர்வே ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை குறிப்பிட்ட எல்லையை தாண்டவில்லை” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இனியும் பெரிய மாறுதலுக்கு உட்படுமா? இரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் தங்கம் விலையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

விலை அதிகரித்தது ஏன்?

தங்கத்தின் விலை குறிப்பாக மூன்று முக்கியமான சூழல்களில் அதிகரிக்கும் என்கிறார், தனியார் நிதி ஆலோசகர் சுதாகர்.

By admin