• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

இரான் – அமெரிக்க போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து உலகம் என்ன சொல்கிறது?

Byadmin

Apr 9, 2026


 இடமிருந்து இஷாக் தார், ஆசிம் முனீர் மற்றும் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், ISHAQ DAR/X

படக்குறிப்பு, இரானுடனான போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து டிரம்ப் பேசியுள்ளார் (கோப்புப் படம்: இடமிருந்து இஷாக் தார், ஆசிம் முனீர் மற்றும் ஷாபாஸ் ஷெரீப்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“நீங்கள் எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி.”

இப்படியான பல கருத்துக்கள் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக போர்நிறுத்தமாக இருந்தாலும் கூட அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இந்தப் பதிவுகளில் பாகிஸ்தான் பாராட்டப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஒரு முழு நாகரிகத்தையும் அழிப்பேன்” என்று விதித்திருந்த காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

By admin