• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

இரான் இஸ்ரேலை விட வளைகுடா நாடுகள் மீது அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?

Byadmin

Mar 9, 2026


இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550க்கும் அதிகமாகும்.

பிபிசி அரபு சேவை ஆய்வின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக நடந்த 12 நாள் போரை விட, தற்போது நடந்து வரும் போரின் போது இரான் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது என தெரிய வருகிறது.

சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது.

ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்த எண்ணிக்கையை ஓமன் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளன.

இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நாடுகளின் நிலப்பகுதி இரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

பிபிசியின் உலக விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், பெசெஷ்கியன் அமைதிக்கான செய்தியை அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளை இரானிய தலைமையின் நிலைப்பாடாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.

By admin