• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

இரான் – இஸ்ரேல்: ரஷ்யா மத்திய கிழக்கில் மேலும் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடுமா?

Byadmin

Jun 18, 2025


இஸ்ரேல் - இரான், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானுடனான தனது கூட்டணி குறித்து ரஷ்யா பேசியிருந்தாலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரானுக்கு இராணுவ உதவி செய்ய வேண்டிய அவசியம் ரஷ்யாவுக்கு இல்லை.

‘ஆபரேஷன் ரைசிங் லயனை’ இஸ்ரேல் தொடங்கிய போது, மத்திய கிழக்கில் நிலவும் சூழலை, ‘கவலைக்கிடமானது’ மற்றும் ‘ஆபத்தானது’ என ரஷ்ய அதிகாரிகள் விவரித்தனர்.

இருப்பினும், ரஷ்யாவுக்கு உள்ள சாதகமான அம்சங்களை ரஷ்ய ஊடகங்கள் விளக்கின.

அவற்றில்:

  • உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவில் அரசு கருவூலத்தை நிரப்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • யுக்ரேனில் ரஷ்யா மேற்கொள்ளும் போரிலிருந்து உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புகிறமு
  • “கீயவ்(யுக்ரேன்)மறக்கப்பட்டுவிட்டது” என்பது மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸில் தலைப்புச் செய்தியாகக் காணப்பட்டது.
  • மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், யுக்ரேனில் அதன் நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும், மத்திய கிழக்கில் தான் ஒரு முக்கிய பங்காளி என்றும், அமைதியை நிலைநாட்டுபவர் என்றும் ரஷ்யாவால் காட்டிக் கொள்ள முடியும். ஆனால், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை நீண்ட காலம் நீடிக்கும் போது, ​​தற்போதைய நிகழ்வுகளால் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்பதையும் உணர முடிகிறது.

By admin