• Fri. Jun 27th, 2025

24×7 Live News

Apdin News

இரான் உடனான 12 நாள் போரில் இஸ்ரேல் சாதித்தது என்ன? இழப்பு யாருக்கு?

Byadmin

Jun 26, 2025


இரான், இஸ்ரேல், இரான் - இஸ்ரேல் தாக்குதல் , அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மாதம் இரான் – இஸ்ரேல் இடையே நடந்த 12 நாள் போர், 1967இல் நடந்த ஆறு நாள் போருடன் ஒப்பிடப்படுகிறது.

இஸ்ரேல், இரான் இடையிலான 12 நாள் போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.

தற்போது நிறைவடைந்துள்ள இரானுடனான போர், 1967ஆம் ஆண்டில் மூன்று நாடுகளுடன் இஸ்ரேல் நடத்திய போருடன் ஒப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் உளவு ஆய்வாளர் யோனா ஜெரிமி பாப் இஸ்ரேலின் ஆங்கில நாளிதழான ஜெருசலேம் போஸ்டில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

“இஸ்ரேல் 1948இல் உருவாக்கப்பட்டது, ஆனால் 1967இல் நடைபெற்ற 6 நாள் போர் மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றியதுடன், இஸ்ரேலுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது. ஆறு நாள் போரில் எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இந்தப் போருக்குப் பிறகு, சினாய், கோலன், மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகியவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இந்த 6 நாள் போருக்கு முன்பு இந்த மூன்று நாடுகளும் இஸ்ரேலை அழித்துவிடும் என மக்கள் நினைத்தனர். யூதர்களின் நாடு பிழைக்காது என மக்கள் நினைத்தனர்,” என்று யோனா ஜெரிமி பாப் எழுதியுள்ளார்.

By admin