• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரான் எண்ணெய் கப்பல்களை தாக்கியதா? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Mar 2, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Fatemeh BahramiAnadolu via Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை தொடங்கி இன்னும் தொடர்கிறது. இரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாகவும், தங்களது நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரானில் முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி மையங்களை தாக்க பயன்படுத்திய பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. இஸ்ரேலும் இரான் மீதான தனது தாக்குதலை தொடர்கிறது.

அதேநேரத்தில், இரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில தளபதிகளை இழந்தாலும் எங்கள் திறன் குறையவில்லை என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

By admin