• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

இரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடைகள் தளர்வால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

Byadmin

Mar 21, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா, யுஏஇ, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், LightRocket via Getty Images

படக்குறிப்பு, இந்தியா தான் நுகரும் எண்ணெய் பொருள்களில் 90% வரை இறக்குமதி செய்கிறது, இது உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தியாவை அதிகம் ஆட்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது.

நெருக்கடியில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இரானிய எண்ணெய் குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக தடை நீக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராக இந்தியா இருக்கலாம்.

தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும்.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சர்வதேச சந்தையில் கிடைக்க வழிவகுக்கும்” என்று கூறினார்.

இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் “பெறுவது கடினமாக இருக்கும்” என்று பெசன்ட் கூறினார்.

By admin