படக்குறிப்பு, மத்திய இஸ்ரேலில் நடந்த இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது
இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார்.
இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் துறைமுக நகரமான ஹைஃபா ஆகியவற்றில் நடைபெற்ற தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹைஃபா நகரில் இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டடமும் கார்களும் சேதமடைந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இரான் நடத்திய தாக்குதலின் விளைவுகளை காட்டும் படங்கள்:
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, டெல் அவிவ் நகரத்தில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வானத்தில் பெரும் ஒளி கீற்று ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
பட மூலாதாரம், Saeed Qaq/Anadolu via Getty Images
படக்குறிப்பு, டெல் அவிவ் நகரில் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு மிக அருகில் உள்ள கட்டடத்தை இரான் ஏவுகணை தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Mostafa Alkharouf/Anadolu via Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரான் ஏவுகணை தாக்கிய காட்சி.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, டெல் அவிவ் நகரில் இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தொடர்பான காணொளிகளில், பெரும் வெடிப்புச் சத்தம் கேட்கிறது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இஸ்ரேலிய நகரம் டெல் அவிவ் பகுதியில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரான் ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவ் நகரத்தில் சேதமடைந்த கட்டடம் ஒன்றில் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, தாக்குதலில் சேதமடைந்த கார்கள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மத்திய இஸ்ரேலின் 4 வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 67 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இஸ்ரேலின் பெட்டா டிக்வா நகரில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, பெட்டா டிக்வா நகரில் சேதமடைந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் மக்கள்
இஸ்ரேல் தாக்கியதில் இரான் ஆயுதப் படைகளின் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் இரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஜி7 மாநாட்டுக்காக அதன் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் கனடாவில் கூடியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.