• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

இரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலுடன் அமெரிக்கா ஆலோசனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு – என்ன நடக்கிறது?

Byadmin

Oct 2, 2024


இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது

மத்திய கிழக்கில் சமீப நாட்களாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் நிஜமாகியுள்ளது. இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலுக்கு முன்பே எச்சரித்திருந்த அமெரிக்கா, இரானின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘இரான் செல்வதைத் தவிர்க்க வேண்டும்’- இந்திய அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேல்- இரான்

பட மூலாதாரம், @MEAIndia

படக்குறிப்பு, இந்தியர்கள் இரான் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் இரான் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் பாதுகாப்புச் சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய குடிமக்கள், இரானுக்கான அத்தியாவசிமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

By admin