• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

இரான் ஒரு வாரமாக தாக்கப்படும் நிலையில் ரஷ்யா, சீனா என்ன செய்கின்றன?

Byadmin

Mar 7, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Reuters

இரானுக்கு எதிரான போரில் “தற்காப்பு” தாக்குதல்களுக்கு தனது விமானப்படை தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ள நிலையில், இரானுக்கு பிற நாடுகளிடமிருந்து என்ன ஆதரவு கிடைக்கும் என்பதன் மீது கவனம் திரும்பியுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இரானுடன் வலுவான ராஜாங்க, வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் சமீபத்திய மோதல், அவர்கள் இரானுக்கு எவ்வளவு தூரம் ஆதரவு அளிப்பார்கள் என்பதை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இரான் ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்கப்படும் நிலையில் ரஷ்யா, சீனா என்ன செய்கின்றன?

ரஷ்யாவின் உரத்த மற்றும் அளவான ஆதரவு

இரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு ரஷ்யாவின் எதிர்வினை உரத்த குரலிலும் அதே நேரத்தில் அளவானதாகவும் உள்ளது. தனது கோபம் மற்றும் இரானுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் அதே வேளையில் இந்த மோதலில் ரஷ்யாவை நேரடியாக இழுத்துவிடும் நகர்வுகளை அந்நாடு கவனமுடன் தவிர்த்து வருகிறது என்கிறார் பிபிசி ரஷ்ய மொழி சேவையின் செர்கேய் கோரியாஷ்கோ.

அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகும் கூட நிலைமை மோசமடைந்தது ஆழ்ந்த ஏமாற்றத்தைத் தந்ததாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஷ்கோவ் தெரிவித்தார்.

இரானிய தலைமை மற்றும் இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளுடன் ரஷ்யா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

By admin