• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

இரான் கடற்கரைக்கு அருகில் சென்று 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

Byadmin

Mar 24, 2026


'இரான் கடற்கரைக்கு மிக அருகில்' - இந்தியாவின்  2 எரிவாயு கப்பல் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த மாத தொடக்கத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்த கப்பல்

பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் டேங்கர் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளது.

கப்பல் போக்குவரத்திற்கு எதிராக இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பயணத்தை மேற்கொள்ளும் பல கப்பல்கள், தங்களைக் கண்டறிவதைக் கடினமாக்குவதற்காக தங்களின் ஏஐஎஸ் (AIS) கண்காணிப்புக் கருவிகளை அணைத்து வைத்துள்ளன.

ஆனால் ஒரு சில கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன. இது தங்களைத் தாக்க மாட்டார்கள் என்ற அதிகப்படியான நம்பிக்கையை உணர்த்துகிறது.

நேற்று, மரைன் டிராஃபிக் தரவுகளின்படி மூன்று கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்கள் இயங்கிய நிலையில் அந்தப் பயணத்தை மேற்கொண்டன.

அந்தக் கப்பல்கள் ஒன்றாக நெருங்கிப் பயணிப்பதையும், வழக்கத்தை விட இரானிய கடற்கரைக்கு மிக அருகில் உள்ள, குறைவாகப் பயன்படுத்தப்படும் பாதையைத் தேர்ந்தெடுப்பதையும் காண முடிந்தது.

By admin