• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

இரான்: கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்க்கும் பிரபலங்களுக்கு நூதன தண்டனைகள்

Byadmin

Jan 9, 2025


தரனே அலிதூஸ்டி

பட மூலாதாரம், Taraneh Alidoosti

படக்குறிப்பு, முக்காடு இல்லாமல் தான் இருக்கும் படத்தை தரனே அலிதூஸ்டி பகிர்ந்திருந்தார்

மாசா அமினி போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, இரான் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரானிய அரசாங்கம் அப்பிரச்னை முற்று பெற்றுவிட்டதாகக் காட்ட விரும்புகிறது, ஆனால் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பல பெண்கள் அதை நிராகரிப்பது அதிகாரிகளுக்கு பெரிய பிரச்னையாக நீடிக்கிறது.

சமீபத்தில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கடுமையான ஹிஜாப் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இரானிய அரசாங்கம் மறுத்துள்ளது. ஆனால், பல பெண்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உடையை அணியாமல் தெருக்களில் நடந்து செல்லும் சம்பவங்கள் தொடர்கின்றன.

சில சமயங்களில் அவ்வாறு செய்வதால் கடுமையான விளைவுகளை அப்பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

இக்குற்றங்களுக்கான தண்டனை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகாரம், நீதிபதிகளிடம் உள்ளது. பெரும்பாலும் அவர்கள் வழக்கத்திற்கு மாறான தண்டனைகளை விதிக்கிறார்கள். குறியீட்டு ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் பாரம்பரிய தண்டனைகளை இணைக்கின்றனர்.

By admin