• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரான் கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்ற முடிந்தாலும் அடுத்து வரும் பெரிய ஆபத்து என்ன?

Byadmin

Mar 31, 2026


வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவை  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர படைகளை அனுப்பக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் கார்க் தீவு வழியாகவே செல்கிறது.

வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தான் படைகளை அனுப்பக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை காட்டியுள்ளார்.

இதன் பின்னணி என்ன, இது எப்படிச் செயல்படும், இதில் உள்ள ஆபத்துகள் என்ன?

கார்க் தீவு நீண்டகாலமாக இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முதன்மை வழியாக இருந்து வருகிறது.

சுமார் இரண்டு மில்லியன் பேரல்கள் கொள்ளளவு கொண்ட ‘மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்களில்’ (விஎல்சிசி) சரக்குகளை ஏற்றும் அளவுக்கு ஆழமான கடற்பரப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது.

By admin