• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

இரான் தாக்குதலால் அமெரிக்க ராணுவ தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் எவ்வளவு?

Byadmin

Mar 21, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், Planet labs PBC and Airbus

படக்குறிப்பு, அல் சாதர் மற்றும் அல் ருவைஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால், போரின் முதல் இரண்டு வாரங்களில் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக புதிய பகுப்பாய்வு கூறுகிறது.

இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இரான் நடத்திய ஆரம்பகட்ட பதிலடி தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக, வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆய்வறிக்கை மற்றும் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துகள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பின்மீது 800 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, முன்பு வெளியான தகவலைவிட அதிகமாக உள்ளது, இது இந்த மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

“அப்பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை,” என சிஎஸ்ஐஎஸ்-ன் மூத்த ஆலோசகரும் அந்த ஆய்வறிக்கையின் இணையாசிரியருமான மார்க் கேன்சியன் கூறுகிறார். “இது அதிகமானதாக தோன்றினாலும், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை முழு தொகை குறித்து தெரியவராது.”

By admin