• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

இரான் தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பு பற்றி எழுப்பும் கேள்விகள் எவை?

Byadmin

Mar 3, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, பஹ்ரைன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது.

வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகத்தைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு சில எச்சரிக்கைகள் கிடைத்திருக்கலாம். முன்னெச்சரிக்கையாக, இங்கிருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றியிருக்கலாம்.

By admin