• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

இரான் நன்றி கூறும் அளவுக்கு இந்தியா செய்தது என்ன?

Byadmin

Jan 24, 2026


2016 ஆம் ஆண்டு இரானுக்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி தெஹ்ரானில் சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2016 ஆம் ஆண்டு இரானுக்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி தெஹ்ரானில் சந்தித்தார்.

இரானில் சமீபத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கியதற்கு எதிராக, வெள்ளிக்கிழமை அன்று ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

இரானிய அரசால் மேற்கொள்ளப்படும் “கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு” முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 47 உறுப்பினர் நாடுகள் அடங்கிய இந்த கவுன்சிலில் இத்தீர்மானம் நிறைவேறியது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனீசியா, இராக், வியட்நாம் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததற்காக இந்தியாவுக்கான இரானின் தூதர் முஹம்மது ஃபதாலி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சாபஹார் துறைமுகம் மீதான தடையை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா எண்ணியுள்ள நிலையில், இரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

By admin