• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

இரான்: பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு – தாய், தந்தையர் கண்ணீர்

Byadmin

Mar 4, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பள்ளி மீது தாக்குதல், இறுதிச்சடங்கு

பட மூலாதாரம், ISNA/WANA via Reuters

தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரானின் ராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை பிபிசி நியூஸால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

அந்தப் பள்ளி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் அமைந்திருந்தது.

By admin