• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை?

Byadmin

Mar 18, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை.

ஆனால், ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் தோல்வியடைவது “நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும்” என்ற அவரது சமீபத்திய கருத்து, அந்த கூட்டணியின் நோக்கம் குறித்து அவர் கொண்டுள்ள புரிதல் ஏற்கெனவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“நேட்டோ ஒரு… தற்காப்புக் கூட்டணியாக உருவாக்கப்பட்டது,” என்று பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் திங்களன்று பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஒரு கூட்டாளி நாடு தனது விருப்பப்படி ஒரு போருக்குச் சென்றுவிட்டு, மற்ற அனைவரும் அதைப் பின்தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டணி வடிவமைக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“நாம் சேர விரும்பிய நேட்டோ இதுதானா என்பதில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை”.

By admin