• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போரில் வளைகுடா நாடுகள் அஞ்சிய ‘ஒரு விஷயம்’ நடந்ததுவிட்டது – அடுத்து என்ன?

Byadmin

Mar 19, 2026


இரான், கத்தார்

பட மூலாதாரம், Reuters

புதன்கிழமை அன்று இரானின் முக்கியமான தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதைப்பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரின் முக்கிய எரிவாயு தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான் “கடுமையான சேதங்களை” ஏற்படுத்தியுள்ளது.

கத்தாருக்கு எதிராக இரான் மேலும் பதில் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என டிரம்ப் எச்சரித்துள்ளார்

இரானின் எரிவாயு உற்பத்தி நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி “மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக” இரான் மீது “கடுமையாக தாக்குதல் நடத்தியதாக” டிரம்ப் கூறியுள்ளார்.

கத்தாரின் வடக்கு எரிவாயு நிலையின் நீட்சியாக உள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையுடன் தொடர்புடைய தளங்களை ”இஸ்ரேல் இலக்கு வைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நகர்வு” என கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

By admin