• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?

Byadmin

Mar 5, 2026


புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா டார்பிடோ ஏவி மூழ்கடித்தது.

பட மூலாதாரம், @IN_HQENC

படக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது.

இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது.

அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை.

ஆனால், இரானியப் போர்க்கப்பலான ‘தேனா’ உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

By admin