• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலையை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

Byadmin

Apr 5, 2026


இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலைகளை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இரான் போர் பல தொழில்துறைகளைப் பாதித்துள்ளது. தற்போது அது எதிர்பாராத வகையில், வாழ்க்கைமுறை நுகர்வுப் பொருளாகக் கருதப்படும் ஆணுறை உற்பத்தித் துறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

ஆணுறைகளைத் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியா, சிலிக்கான் எண்ணெய் போன்ற முக்கியமான பெட்ரோகெமிக்கல் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விநியோகத் தடங்கல்கள் காரணமாக, ஆணுறைகளின் விலை உயரக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

சுமார் 8000 கோடி மதிப்புள்ள இந்தியாவின் ஆணுறை துறையைச் சேர்ந்த வட்டாரங்களின்படி, அம்மோனியா விலை 40 முதல் 50% வரை உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சிலிக்கான் எண்ணெயும் இந்த விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதால், அதன் விலையும் உயரக்கூடும்.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்த துறைசார் அதிகாரி, பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “இந்தத் துறையில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏனெனில், ஆணுறை இப்போது ஒரு வாழ்க்கைமுறை பொருளாக மாறிவிட்டது. மேலும் அதன் வர்த்தகம் மக்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

By admin