• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் முரண்படுகிறதா? – லெபனானில் தொடரும் ராணுவ நடவடிக்கை

Byadmin

Apr 8, 2026


இரான், இஸ்ரேல், லெபனான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, புதன்கிழமை காலை லெபனானின் சிடோன் நகரில் நிகழ்ந்த இஸ்ரேல் தாக்குதலின் பாதிப்பு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுக்கு அமெரிக்கா விதித்த கெடு முடிவதற்கு சற்று முன்பு இருநாடுகளுக்கும் இடையே இரண்டு வாரகால போர்நிறுத்தம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இரான் தரப்பிலிருந்து முதலில் போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் தரப்பிலிருந்து போர்நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் போர்நிறுத்தத்தில் லெபனானும் உள்ளடங்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இரான் வழங்கிய 10 புள்ளிகள் கொண்ட முன்மொழிவிலும் லெபனானில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இஸ்ரேல் இந்த போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனத் தெரிவித்துள்ளது.

By admin