• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர் நீடித்தால் அதை முடிவுக்குக் கொண்டுவருவது ஏன் மேலும் கடினமாகும்?

Byadmin

Mar 25, 2026


மத்திய கிழக்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

கடந்த சில வாரங்களாக, இரானின் ராணுவத் திறன் கடுமையாகப் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகின்றன.

தொடர்ச்சியான தாக்குதல்கள் இரானின் கட்டளை அமைப்பை முடக்கியுள்ளன என்றும், அதன் பதிலடி கொடுக்கும் திறனைக் குறைத்துள்ளன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

அவர்களது கணக்குப்படி, மோதல் ஏற்கனவே முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி இரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியது சனிக்கிழமை தெரியவந்தது. இது இரானிலிருந்து சுமார் 3,800 கி.மீ (2,300 மைல்கள்) தூரத்தில் உள்ளது.

ஏவுகணைகள் அந்தத் தீவை அடையவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் இரானின் திறன்கள் குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. இதுவரை, அதன் ஏவுகணைகளின் திறன் சுமார் 2,000 கி.மீ என்றுதான் பரவலாக நம்பப்பட்டது.

By admin