• Tue. Mar 17th, 2026

24×7 Live News

Apdin News

இரான் மக்களுக்கு போர் குறித்து என்ன சொல்லப்படுகிறது?

Byadmin

Mar 17, 2026


இரான் அரசு செய்தி நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர் ஒருவர், அதி உயர்  தலைவர் அயத்துல்லா அலி காமனெயியின் மரணத்தை அறிவிக்கும்போது அழுதார்.

பட மூலாதாரம், IRTV

படக்குறிப்பு, இரான் அரசு செய்தி நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர் ஒருவர், அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மரணத்தை அறிவிக்கும்போது அழுதார்.

அந்தச் செய்தி முதலில் வெளிநாட்டு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது.பெரும்பாலான இரானியர்களால் அந்த தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியாது.

பிப்ரவரி 28 அன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “கொடுங்கோலன் இனி இல்லை என்பதற்கான அறிகுறிகள் உள்ளன” என்று கூறினார்.

இதன் மூலம் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை அவர் உணர்த்தினார்.

ஆனால், அரசு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இரான் மக்கள் நிசப்தத்தையே எதிர்கொண்டனர்.

அரசு அதிகாரிகள் காமனெயியின் மரணத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

By admin