• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

Byadmin

Jan 10, 2026


மஷாதில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, மஷாத்தில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் வகையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர்

ஜனவரி 7ஆம் தேதி நிலவரப்படி 24 மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலும், ஆங்காங்கே சிதறியவையாகவும் காணப்பட்டன.

தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய நகரங்களில் அரிதாகக் காணப்படும் பெரிய அளவிலான கூட்டங்கள் கூடத் தொடங்கியுள்ளன.

இது கவனத்தை தலைநகரில் இருந்து பிற இடங்களுக்கு திருப்பியுள்ளது.

இந்த அமைதியற்ற சூழல் குறித்து தெளிவான ஒற்றை விளக்கம் என ஏதுமில்லை. சிலர் இது பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டதாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது நீண்டகால அரசியல் மற்றும் சமூகக் குறைகளின் சமீபத்திய வெளிப்பாடு என்று விவரிக்கின்றனர்.

தற்போதைய அமைதியற்ற சூழல், 2022ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டங்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

By admin