• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Mar 18, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், AL-ARAB, AL-AKHBAR

படக்குறிப்பு, சில வளைகுடா நாடுகள் இரானின் சக்தியைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை பல அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரான் போரின் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் அமெரிக்கா தொடர்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பல்வேறு கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இரானை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் ராய்ட்டர்ஸ் செய்திக்குச் சில ஊடகங்கள் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளன.

இதற்கு மாறாக, வேறு சில ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தும், “வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும் சூழலை அமெரிக்கா புறக்கணிப்பதாக” குற்றம் சாட்டியும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

வளைகுடா ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளிவரும் சில தகவல்கள், அமெரிக்கா மீதான தங்களின் நீண்டகால பாதுகாப்புச் சார்புநிலையை வளைகுடா நாடுகள் மறுமதிப்பீடு செய்யும் என்று தெரிவிக்கின்றன.

By admin