• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

Byadmin

Mar 2, 2026


இரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் இஸ்ரேல் பயணத்தில் இருந்து திரும்பினார்

இந்திய பிரதமர் மோதி இரண்டு நாள் இஸ்ரேல் பயணத்தில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே இரான் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதி செய்தன. இரானின் அதிஉயர் ஆயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதனை இரானிய அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோதி பயணத்தின்போது, இரு நாட்டு அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், 10 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தப் பயணம் இஸ்ரேலுக்கான இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவையும் தெளிவாகக் காட்டியது.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றிய மோதி, “இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது. வலுவாக, முழு நம்பிக்கையுடன், இப்போதும் எதிர்காலத்திலும்” என்று கூறினார்.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் மேற்கொண்ட “இரக்கமற்ற பயங்கரவாத தாக்குதல்” பற்றிப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் பலியாகினர், 250க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் கைப்பற்றப்பட்டனர்.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரதமர் மோதியை இஸ்ரேல் பயணத்தின்போது பாலத்தீன உரிமைகள் பிரச்னையை எழுப்புமாறு வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோதி அதை எழுப்பவில்லை.

By admin