• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் இந்த அரபு நாடுகள் அச்சம் ஏன்?

Byadmin

Mar 1, 2026


இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
படக்குறிப்பு, டெஹ்ரானின் ஜம்ஹுரி சதுக்கத்தின் ஒரு காட்சி

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, ‘பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்’ நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரான் உச்ச தலைவர் காமனெயி அலுவலகம் மற்றும் டெஹ்ரானில் உள்ள அதிபர் அலுவலகம் ஆகியவையும் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார்.

தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன – அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

By admin