• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

இரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல்- என்ன நடக்கிறது?

Byadmin

Feb 28, 2026


காணொளிக் குறிப்பு, இரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல்- என்ன நடக்கிறது?

காணொளி: இரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

இரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்காவும் ஈடுபட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை இரான் அரசு ஊடகமும் உறுதிப்படுத்தி உள்ளது. என்ன நடக்கிறது?

இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இரானிய தலைநகரின் Republic area பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பாக இரான் அரசு ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவும் இதில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.

இந்த தாக்குதலை அடுத்து இரான் மற்றும் இஸ்ரேலின் வான்பரப்பு மூடப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக கூறி உள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin