• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பாகிஸ்தான் மற்றும் சௌதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

Byadmin

Jun 15, 2025


இரான், இஸ்ரேல் தாக்குதல், முக்கிய செய்திகள், மத்திய கிழக்கு செய்திகள், வளைகுடா நாடுகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இஸ்ரேல், இரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கத்தார், சௌதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை இஸ்ரேல் மீறுகிறது என்று கத்தார் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது. சௌதி அரேபியா, இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் என்று அழைத்துள்ளது.

இரான் அரசு ஊடக செய்திப்படி வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

By admin