• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்கா கூறுவது என்ன?

Byadmin

Jun 13, 2025


இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் ‘இதயத்தை’ குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.

“இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.

ஏப்ரல் 2021 இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.

“அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள” இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் “எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்” என்று எச்சரித்தார்.

By admin