• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

இரான் விவகாரத்தில் இந்தியா ‘மௌன’ உத்தி கடைபிடிப்பது ஏன்? நிபுணர்கள் பகுப்பாய்வு

Byadmin

Mar 6, 2026


இரான், இந்தியா, மத்திய கிழக்கு, ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், XPD Division, MEA

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதுகிறார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை (மார்ச் 5) டெல்லியில் உள்ள இரான் தூதரகத்தில் இரானின் மறைந்த அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் இந்தியாவின் சார்பாக ஒரு செய்தியையும் அவர் எழுதினார்.

காமனெயி கடந்த சனிக்கிழமை அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். காமனெயியின் மறைவுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று இந்தியா முதல் முறையாக இரங்கல் தெரிவித்தது.

போரின் முதல் நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசினாலும், இந்த உரையாடலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்தியா இரங்கல் தெரிவித்ததோ அல்லது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை விமர்சித்ததோ குறிப்பிடப்படவில்லை.

காமனெயியின் மறைவுக்குப் பிறகு ஐந்து நாட்களாக இந்தியா மௌனம் காத்தது. இரான் விவகாரத்தில் அரசாங்கத்தின் மௌனம் குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

By admin