• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு | Investigation into pharmaceutical companies following cough medicine issue

Byadmin

Oct 11, 2025


சென்னை: இரு​மல் மருந்து விவ​காரத்தை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் உள்ள மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களில் ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1-ம் தேதி மத்​தி​யப் பிரதேச மருந்து கட்​டுப்​பாடு துறை​யிடம் இருந்​து, தமிழக மருந்து கட்​டுப்​பாடு துறைக்கு கடிதம் வந்​தது. அதில், கடந்த செப்​.4-ம் தேதி முதல் மத்​தி​யபிரதேச மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் ஏற்​பட்ட குழந்​தைகள் மரணத்​துக்கு தொடர்​புடைய​தாக கருதப்​படும் கோல்ட்​ரிஃப் சிரப் குறித்த விவரம் இருந்​தது.

இதையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறு​வனத்​தில் குழு​வினர் ஆய்வு செய்​த​தில் அந்த மருந்​தில் டைஎத்​திலீன் கிளை​சால் எனப்​படும் நச்சு ரசாயனம் 48.6 சதவீதம் இருப்​பது தெரிய​வந்​தது. மேலும் மருந்து உற்​பத்​தியை நிறுத்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டு, கடந்த 3-ம் தேதி நிறு​வனம் மூடப்​பட்​டது.

நிறு​வனத்​தின் மருந்து உரிமத்தை முழு​வது​மாக ஏன் ரத்து செய்​யக்​கூ​டாது என விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு, தகவல் பெறப்​பட்ட 48 மணி நேரத்​தில் தமிழக அரசின் மருந்து கட்​டுப்​பாட்டு துறை துரித நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இந்த தகவல்​கள் அனைத்​தும் மத்​தி​யப் பிரதேச மருந்து கட்​டுப்​பாட்டு துறைக்​கும் கடந்த 3-ம் தேதி இமெ​யில் மூல​மாக அனுப்பி வைக்​கப்​பட்​டது.

கோல்ட்​ரிஃப் மருந்​தில் 48.6 சதவீதம் நச்சு பொருள் இருந்​ததன் காரண​மாக அந்த மருந்து நிறு​வனத்​தின் உரிமை​யாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. சுங்​கு​வார்​சத்​திரம் காவல் நிலை​யத்​தி​லும் புகார் அளிக்​கப்​பட்​டது. தமிழக காவல் துறை​யின் உதவி​யுடன் மத்​திய பிரதேச சிறப்பு புல​னாய்வு பிரிவு கடந்த 9-ம் தேதி அதி​காலை சென்னை அசோக் நகர் பகு​தி​யில் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதன் (75) கைது செய்​யப்​பட்​டார். முது​நிலை மருந்​துகள் ஆய்​வாளர் இரு​வர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டு, துறைரீ​தி​யான மேல் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

தமிழகத்​தில் அமைந்​துள்ள இதர மருந்து உற்​பத்தி நிறு​வனங்​கள்​மீது விரி​வான ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டு,ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.



By admin