• Fri. Jan 24th, 2025

24×7 Live News

Apdin News

இரும்பின் காலம்: உலகில் தமிழர்கள்தான் முதலில் இரும்பை உருக்கி பயன்படுத்தினார்களா?

Byadmin

Jan 24, 2025


சிவகளை , இரும்புக் காலம், மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

படக்குறிப்பு, சிவகளை தொல்லியல்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry – ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.



By admin