இரு ஆண்டுகளில் 18 பேரிடம் திருமணம் மோசடி செய்ததாக பெண் கைது – முழு பின்னணி
“நான் ஒருவரோடு பழகிய பிறகு அவர்களைத் திருமணம் செய்துகொள்வேன். பிறகு அவர்களுடன் சண்டை போட்டு, அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவேன். அதன் பிறகு மீண்டும் மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்வேன்” என்கிறார் 24 வயதான சாந்தினி.
இரண்டு ஆண்டுகளில் 18 திருமணங்கள் செய்து, பலரிடம் மோசடி செய்ததாக சாந்தினி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ததாக குஜராத் மாநிலத்தின் மேஹ்சானா மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
திருமணம் செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்தக் கும்பல் வலை வீசி, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் மணமகனிடமிருந்து பணம் வாங்கி, மணமகளை அங்கிருந்து தப்பிக்கச் செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பான புகாரில்,’போலி மணமகள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணையும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த திருமண விவகாரம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது? குற்றவாளிகளை போலீசார் எப்படி பிடித்தார்கள்? காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு