0
இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராம் விலையை 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 125 ரூபாவினால் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலையை 50 ரூபாவினால் குறைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மா விலை குறைந்து வருவதால், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால் மா விலையை குறைக்க எதிர்பார்க்கிறோம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.